அதிக முதலீடு பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் பிளிப்கார்ட்க்கு 3ம் இடம்!
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் மின்னணு வணிகத்தில் ஈடுபட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனம் உலக அளவில் அதிக முதலீடுகளை பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் பட்டியலில் 3ம் இடம் பெற்றுள்ளது. ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனமான சாப்ட்பேங்க் ( SoftBank ) நிறுவனத்தின் சமீபத்திய புதிய 2.4 பில்லியன் டாலர் முதலீட்டையும் சேர்த்து மொத்தம் 7 பில்லியன் டாலர்கள் (1 பில்லி$ = 6400 கோடி ரூபாய்) முதலீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். வீட்டில் குடியிருந்துகொண்டே ஒரு அறையை உள்வாடகைக்கு விடும் AirBNB – 3.3 பில்லியன் அலுவலக இடத்தை உள்வாடகைக்கு விடும் இணையதளம் WeWork – 2.7 பில்லியன் நிழற்படங்களை சேகரித்து பதிவிடும் சமூக தொடர்பு இணையதளம் Pinterest 1.5 பில்லியன் சீனாவின் வாடகை வாகனங்கள் தேடி பயன்படுத்தும் இணையதளம் Didi Chuxing – 15 பில்லியன் அமெரிக்காவின் வாடகை வாகனங்கள் தேடி பயன்படுத்தும் இணையதளம் Uber – 12.9 பில்லியன் முதலீடுகளுடன் உள்ளன, இந்த முதல் 10 பட்டியலில் 4 நிறுவனங்கள் வாடகை வாகனங்கள் பயன்படுத்த உத...